இயற்கை உரப்பந்தால் அசத்திய 'வித் யூ கல்வி' அறக்கட்டளை!!

     -MMH

     கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த ஆனைமலை சுற்று வட்டார பகுதிகளில் பரவலாக மழைப்பொழிவு இருந்து வருகிறது. இந்நிலையில் இயற்கை உரங்களைப் பயன்படுத்தி குரிஞ்சி, மருது, வேம்பு, ஆலம், அத்தி, நாவல், கடம்பு  உள்ளிட்ட மரங்களின் விதைகளை வைத்து பத்தாயிரம் விதைப்பந்துகள் உருவாக்கி  ஆனைமலை வனப்பகுதியில் வனத் துறையின் அனுமதியுடன் 'வித் யூ கல்வி' அறக்கட்டளையின் சார்பில் 30 க்கும் கூடுதலான உறுப்பினர்கள் கலந்து கொண்டு வனப்பகுதிக்குள் மரங்கள் இல்லாத வெற்றிடங்களை கண்டறிந்து விதைப்பந்துகளை தூவினர்.

இந்த விதைப்பந்துகள் அதிக அளவில் பயன் தரும் என வனத்துறை அலுவலர்களும்,சமூக ஆர்வலர்களும் தெரிவித்துள்ளனர். மரம் வளர்ப்போம் மழை பெறுவோம் என்ற சிந்தனையோடு, தால் அசத்திய 

-M.சுரேஷ்குமார், கோவை தெற்கு.

Comments