உடற்பயிற்சியினால் கிடைக்கும் எல்லையில்லா மகிழ்ச்சி!!
ஒவ்வொரு மனிதனும் தினந்தோறும் அதிகாலையில் எழுந்து தன்னுடைய உடலை பயிற்சி செய்து வந்தால் நோயிலிருந்து விடுபட அதிகப்படியான வாய்ப்புகள் உள்ளது என்று மருத்துவர்களும் முதியவர்களும் கூறிவருகின்றனர்.
உடற்பயிற்சி செய்யும்போது மனதும் பயிற்சி அடைகிறது என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். கட்டுமஸ்தான உடல் இருந்தால் எங்கு சென்றாலும் அவருக்கு ஒரு தனி சிறப்பு உண்டு என்று உடற்பயிற்சி நிபுணர்கள் கூறுகின்றனர். ஆகையால் சுவர் இருந்தால் மட்டுமே சித்திரம் வரைய முடியும் என்பார்கள் அனைவரும் உடற்பயிற்சி செய்து ஆரோக்கியத்துடன் வாழ்வோம் நோய் வராமல் காப்போம்.
-ஈஷா,கோவை.
Comments