கொரோனா கிடக்குது..! டாஸ்மாக் பார்களை திறந்து விடுங்க..! குடிகாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்!!
தமிழகத்தில் டாஸ்மாக் பார்களை நாளை முதல் திறக்க அரசு அனுமதி அளித்துள்ளது. நிபந்தனைகளுடன் டாஸ்மாக் பார்களை 50 சதவீத இருக்கைகளுடன் திறக்கலாம் என்று அனுமதித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா லாக்டவுன் அறிவிக்கப்பட்ட மார்ச் மாதம் 17ம் தேதி மூடப்பட்ட டாஸ்மாக் பார்கள் கிட்டத்தட்ட 9 மாதங்களுக்கு பிறகு திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
நாளை முதல் தமிழகத்தில் டாஸ்மாக் மதுக்கடைகளில் உள்ள பார்களை 50 சதவீத இருக்கைகளுடன் திறக்கலாம் என்று அரசு அறிவித்துள்ளது. பார்களுக்கு வருவோருக்கு வெப்ப பரிசோதனை கட்டாயம் நடத்த வேண்டும். பார்களின் நுழைவு வாயில்களில் சானிடைசர்களை வைக்க வேண்டும். கொரோனா அறிகுறி இல்லாதவர்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகளை டாஸ்மாக் நிறுவனம் விதித்துள்ளது
-பாலாஜி தங்கமாரியப்பன் சென்னை போரூர்.
Comments