"மோடியா இந்த லேடியா!! எனக்கேட்ட ஜெயலலிதாவின் விருப்பத்திற்கு மாறாக அதிமுக செயல்படுகிறது."கே.ஆர்.பெரியகருப்பன் பேட்டி!!

     -MMH

"மோடியா இந்த லேடியா!! எனக்கேட்ட ஜெயலலிதாவின் விருப்பத்திற்கு மாறாக அதிமுக செயல்படுகிறது"

                                        - முன்னாள் அமைச்சர், கே.ஆர்.பெரியகருப்பன், எம்.எல்.ஏ


பிஜேபியை டெபாசிட் இழக்க செய்ய வேண்டும் என சூழுரைத்தவர் ஜெயலலிதா. தனக்கு அதிகாரம் இருக்கிறது என்பதால் பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ளவர் பழனிச்சாமி என கே.ஆர்.பெரியகருப்பன் எம்.எல்.ஏ குற்றச்சாட்டு.

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் அருகே கண்டவராயன்பட்டியில் திமுக சார்பில் மக்கள் கிராமசபை கூட்டம் நடைபெற்றது.

திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினரும், திமுக சிவகங்கை மாவட்ட செயலாளருமான கே.ஆர்.பெரியகருப்பன் தலைமையில் திருப்புத்தூர் ஒன்றிய குழு தலைவரும், திமுக ஒன்றிய செயலாளருமான சண்முகவடிவேல், அவைத்தலைவர் திருநாவுக்கரசு ஆகியோர் முன்னிலையில் மக்கள் கிராமசபை கூட்டம் நடைபெற்றது.

மக்களிடையே பேசிய கே.ஆர்.பெரியகருப்பன், "வாழ்க்கையில் நான் செய்த மிகப்பெரிய தவறு பிஜேபியுடன் கூட்டணி வைத்ததுதான் என்றும், அதற்கும் மேலாக ஒருபடி சென்று குஜராத் மோடியா இல்லை தமிழகத்தில் இந்த லேடியா என தனது நிர்வாகத்திறனின் மீது நம்பிக்கை வைத்து பிஜேபியை டெபாசிட் இழக்க வேண்டும் என சூழுரைத்தவர் ஜெயலலிதா. ஆனால் அதையெல்லாம், தனக்கு அதிகாரம் இருக்கிறது என்பதால் மூடி மறைத்துவிட்டு பாஜகவுடன் கூட்டணி வைத்து உள்ளார், தற்போதைய முதல்வர்" என குற்றம் சாட்டினார். 

அதனை தொடர்ந்து வேலையில்லா திண்டாட்டத்தை ஏற்படுத்திய அதிமுகவை நிராகரிப்போம் என கோஷங்கள் எழுப்பினர். இந்நிகழ்ச்சியில் மாவட்ட, ஒன்றிய, நகர் கழக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். கண்டவராயன்பட்டி ஊராட்சி மன்றத்தலைவர் அபிராமி சசிகுமார் நன்றி கூறினார். இதே போன்று கருப்பூரில் ஒன்றியக்குழு தலைவர் சண்முகவடிவேல் தலைமையில் நடைபெற்ற மக்கள் கிராம சபை கூட்டத்தில் அதிமுக வை நிராகரிப்போம் என்ற கோஷங்கள் எழுப்பினர்.

இந்நிகழ்ச்சியியில் மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளர் உதய சண்முகம், முன்னாள் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் நாராயணன், மாவட்ட கவுன்சிலர் ஏடிஎன்.ரவி, ஒன்றிய கவுன்சிலர் சகாதேவன், ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர்கள் தமிழ்நம்பி, சோமசுந்தரம், எம்.புதூர் கண்ணன், கண்டவராயன்பட்டி சண்.சீமான் சுப்பையா, ஜெகன், வையகளத்தூர்  ராதாகிருஷ்ணன், கண்டவராயன்பட்டி சசிகுமார், தொமுச சண்முகநாதன், ஒன்றிய இளைஞரணி மாறன், திமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு ஒன்றிய அமைப்பாளர் அரிஹரசுதன், மற்றும் மாவட்ட, ஒன்றிய, நகர் கழக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். கண்டவராயன்பட்டி ஊராட்சி மன்றத்தலைவர் அபிராமி சசிகுமார் நன்றி கூறினார்.

- அப்துல்சலாம், திருப்பத்தூர்.

Comments