பொன்னமராவதி அருகே 500 ஆண்டுகளுக்குப் பின் ஆருத்ரா தரிசன விழா! பக்தர்கள் மகிழ்ச்சி!!!
பொன்னமராவதி அருகே தேரடிமலம்பட்டியில் அருள்மிகு அருணவள்ளி சமேத ஆதிபூமிநாதர் ஆலயத்தில் 500 ஆண்டுகளுக்குப் பிறகு ஆருத்ரா தரிசன விழா, சுவாமி ஊர்வலம் நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி அருகே உள்ள தேரடி மலம்பட்டியில் அருள்மிகு அருணவள்ளி சமேத ஆதி பூமிநாதர் கோவிலில் ஆருத்ரா தரிசன விழா நடைபெற்றது.
500 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெறும் இவ்விழாவினை முன்னிட்டு சிவகாமி அம்பிகா சமேத நடராஜர் சுவாமிக்கு காலை ஜப ஹோமங்கள் நடைபெற்று. பின்பு பால், தேன், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 11 வகையான அபிஷேகங்கள் நடைபெற்று தீபாராதனை காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து நடராஜர் சுவாமி திருவீதி உலா நடைபெற்றது. சுற்றுவட்டாரப் பகுதி கிராம பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு அருள் பெற்றனர். இதில் கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் அருட் பிரசாதம் வழங்கப்பட்டது.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
-M.சதாம் உசேன்.
Comments