அருள் மிகு பலமலை முருகன் கோவிலில் 44 ஆம் ஆண்டு மண்டல நிறைவு விழா!!
அருள் மிகு பலமலை முருகன் கோவிலில் 44 ஆம் ஆண்டு மண்டல நிறைவு விழா மிக விமரிசையாக நடைபெற்றது.
கோவை மாவட்டம் திருமலையம்பாளையம் பேரூராட்சிக்கு உட்பட்ட குமாட்டிபதி பகுதியில் உள்ள அருள்மிகு பதிமலை பாலமுருகன் அருள்மிகு பதிமலை பத்திரகாளியம்மன் திருக்கோவிலில் 44 ஆம் ஆண்டு மண்டல பூஜை நிறைவு விழா விமர்சையாக நடைபெற்றது. இக்கோவில் உள்ள அருள்மிகு மாரியம்மன், அருள்மிகு இடும்பன், சுவாமி திருக்குட நன்னீராட்டு பெருவிழா மற்றும் அருள்மிகு விநாயகர் சுயம்பு பத்திரகாளி அம்மன் என்ற அனைத்து கடவுள்களும் அடங்கிய இக்கோவிலின் 44 மண்டலபூஜை விமரிசையாக நடைபெற்றது.
இதில் அப்பகுதி மக்கள் மட்டும் இல்லாமல் வெளி மாவட்டத்தில் இருந்து பக்தர்களும் வந்து தரிசனம் செய்தனர். அன்னதானம் விழாவில் சிறப்பு அழைப்பாளர் கிணத்துக்கடவு சட்டமன்ற உறுப்பினர் எட்டிமடை சண்முகம் கலந்து கொண்டார். இக்கோவிலின் சிறப்பம்சம் பக்தர்கள் வேண்டும் அனைத்து வேண்டுதலும் நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாகும். இதுவே இக்கோவிலின் சிறப்பாகும். இதில் திருக்கோவில் திருப்பணிகள் கே.மகாலிங்கம் உட்பட நிர்வாகிகள், பக்தர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
-சீனி,போத்தனூர்.
Comments