கோவையில் 15-ஆம் தேதி முதல் மினி கிளினிக்!!
கோவை மாநகராட்சி பகுதியில், 7 இடங்களில், 'மினி கிளினிக்' துவக்க திட்டமிடப்பட்டுள்ளது.கொரோனா தொற்று பரவல் காரணமாக, வீதிக்கு வீதி மருத்துவ முகாம்கள் நடத்தப்படுகின்றன. மேலும் மக்கள் நெருக்கமாக வசிக்கும் பகுதிகளில், நோய் பரவாமல் தடுக்க வசதியாக, 'மினி கிளினிக்' துவக்கப்படும் என, தமிழக முதல்வர் பழனிசாமி அறிவித்தார். இத்திட்டம், வரும், 15ம் தேதி துவக்கி வைக்கப்படுகிறது.கோவை மாநகராட்சி பகுதியில், 7 இடங்களில் துவக்க திட்டமிடப்பட்டுள்ளது; இந்த கிளினிக்கில் ஒரு டாக்டர், ஒரு நர்ஸ் பணியில் இருப்பர். பொது மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு, மருந்து, மாத்திரைகள் இலவசமாக வழங்கப்படும் என,சுகாதாரப் பிரிவினர். தெரிவித்தனர்.
டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் (மொஹல்லா கிளினிக்) தெரு ஒரே மருத்துவமனை. என்ற திட்டத்தை தொடங்கி அதில் வெற்றி கண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
-அருண்குமார் கோவை மேற்கு.
Comments