திருப்பூரில் பா.ஜ., மறியல்!! - டவர் மீது ஏறிய தொண்டர்!!

     -MMH


        திருப்பூர்:பா.ஜ.,வின் வேல் யாத்திரைக்கு அனுமதி கேட்டு, மறியலில் ஈடுபட்ட, 250 பேரை போலீசார் கைது செய்தனர்.தமிழகம் முழுவதும் பா.ஜ., நேற்று துவங்கிய வேல் யாத்திரைக்கு, அனுமதி தர மாநில அரசு மறுத்து விட்டது. இதை கண்டித்தும், அனுமதி வழங்க கேட்டும், திருப்பூர் புதிய பஸ் ஸ்டாண்ட் அருகே, நேற்று அக்கட்சியினர் மறியலில் ஈடுபட்டனர்.


       இதனால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மறியலில் ஈடுபட்ட மாநில செயலாளர் மலர்க்கொடி, மாவட்ட தலைவர் செந்தில்வேல், பொது செயலாளர்கள் சீனிவாசன், கதிர்வேல், தங்கராஜ் உட்பட, 250 பேரை, போலீசார் கைது செய்தனர். அனைவரும் திருமண மண்டபத்தில் அடைக்கப்பட்டனர்.



       மறியல் போராட்டம் நடந்து கொண்டிருந்தபோது, அப்பகுதியில் தனியார் கட்டடம் ஒன்றில் அமைக்கப்பட்டிருந்த மொபைல்போன் டவர் மீது குரு என்ற தொண்டர் பா.ஜ., கொடியுடன் ஏறி, 'வெற்றிவேல் யாத்திரைக்கு அனுமதி அளிக்க வேண்டும்' என கோஷமிட்டார்.மாவட்ட நிர்வாகிகள் மற்றும் போலீசார் சமாதானம் செய்து கீழே இறங்க செய்தனர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.


நாளையவரலாறு செய்திக்காக, 


-முஹம்மது ஹனீப்,திருப்பூர்.


Comments