இன்று குரு பெயர்ச்சி விழா! கோவில்களில் சிறப்பு வழிபாடு!!
-MMH
ஆண்டு தோறும் குருபகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு பிரவேசிப்பது குரு பெயர்ச்சி என்று அழைக்கப்படுகிறது 15.11.2020 ஆகிய இன்று குரு பெயர்ச்சி நடைபெறுகிறது இன்றைய குரு பெயர்ச்சி முன்னிட்டு கோவில்களில் சிறப்பு வழிபாடு செய்யப்படுகிறது ஐப்பசி 30 ஆம் தேதியான இன்று இரவு குரு பகவான் தனுசு ராசியிலிருந்து மகர ராசிக்கு இடப்பெயர்ச்சி ஆகிறார் ,அதனை முன்னிட்டு குரு ஸ்தலங்களான திட்டை மற்றும் ஆலங்குடி கோவில்களில் சிறப்பு பூஜை மற்றும் யாகம் வளர்க்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தஞ்சை அருகே உள்ளது திட்டை என அழைக்கப்படும் தென்குடித்திட்டை, இங்கு பழமையான வசிஷ்டேஸ்வரர் கோவில் உள்ளது, வசிஷ்ட முனிவர் வழிபாடு செய்த தலம் ஆதலால் வசிஷ்டேஸ்வரர் என மூலவர் அழைக்கப்படுகின்றார்.சிறப்பு யாகத்தில் பக்தர்கள் கலந்து கொள்ள அனுமதி இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பக்தர்கள் அர்ச்சனை செய்வதற்கான பூஜை பொருட்களை எடுத்து செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது, காலை 6 மணி முதல் மாலை 7.30 வரை பக்தர்கள் கலந்து கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது . பொது இலவச தரிசனம் மற்றும் சிறப்பு தரிசனத்தில் செல்லும் பக்தர்கள் சமூக இடைவெளியுடன் நின்று இறைவனை தரிசனம் செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது . திட்டை செல்வதற்கு தஞ்சாவூர் மற்றும் கும்பகோணத்தில் இருந்து பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
அதேபோன்று திருவாரூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது
ஆலங்குடி குரு ஸ்தலம். இங்கு மூலவர் ஆபத்சகாயேஸ்வரர் என்னும் திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்,ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோயில் குரு பகவானுக்கான சிறப்பு வாய்ந்த திருத்தலமாக பார்க்கப்படுகின்றது. குருபெயர்ச்சி தினத்தில் குருவருள் பெற தேடி வரும் கோயிலாக ஆபத்சகாயேஸ்வரர்கோயில் உள்ளது.
இங்குள்ள மூலவர் ஆபத்சகாயேஸ்வரர் சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கின்றார். அம்பிகை இந்த தலத்தில் தவம் இருந்து இறைவனைத் திருமணம் செய்துகொண்டார்.விஸ்வாமித்திரர், முகுந்தர், வீரபத்திரர் வழிபட்ட புண்ணிய தலமாகும்.இந்த திருக்கோயில் குறித்து சிவனின் தேவாரப்பாடல் பாடப்பெற்றுள்ளது.
இங்குள்ள சுந்தரர் சிலையில் அம்மை தழும்புகள் இருப்பதை காணலாம்.
இந்த திருத்தலம் சோழர்களால் கட்டப்பட்டது.தட்சிணாமூர்த்தி ஆலகால விஷத்தை குடித்து தேவர்களை காத்ததால் இதற்கு ஆலங்குடி என பெயர் வந்தது. இங்கு ஆலமரத்திற்குக் கீழ் அமர்ந்து சனகாதி முனிவர்களுக்கு உபதேசம் செய்கிறார்.ஆலங்குடி கோவிலுக்கு செல்ல கும்பகோணத்தில் இருந்து மன்னார்குடி செல்லும் பேருந்துகளில் பயணிக்கலாம்.
பக்தர்கள் அமைதியுடனும் சமூக இடைவெளியுடன் பாதுகாப்புடன் இறைவனை தரிசிக்க அறநிலையத்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது இரண்டு கோவில்களிலும் இதற்கான ஏற்பாட்டை மாவட்ட ஆட்சியர் தலைமையில் அறநிலையத்துறை செய்துள்ளது.
நாளைய வரலாறு செய்திக்காக,
-ராஜசேகரன்,தஞ்சாவூர்.
Comments