அதிரடி காட்டும் ஆனைமலை புலிகள் காப்பகம்!!
கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த ஆனைமலை பகுதியில் உள்ள ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு வரும் சுற்றுலா பயணிகள் வனப்பகுதிக்குள் புகை பிடித்தல் மது அருந்துதல் வன விலங்குகளை துன்புறுத்தும் வகையில் புகைப்படம் எடுத்தல் போன்ற பல்வேறு விதி மீறல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.இதனை தடுக்க ஆனைமலை புலிகள் காப்பாகத்தின் துணை இயக்குனர் திரு.ஆரோக்யராஜ் வனப்பகுதிக்குள் இட்ரோன் கேமராவை கொண்டு செல்ல தடை விதித்தார்.
மேலும் சுற்றுலா பயணிகள் பீடி சிகரெட் மது பாட்டில்கள் போன்றவற்றை கொண்டு செல்லாமல் இருப்பதை தடுக்க முழுமையான வாகன சோதனையில் ஈடுபடவும் விதியை மீறி செயல்படும் சுற்றுலா பயணிகளுக்கு அபராதத்துடன் வன பகுதியில் இருந்து உடனடியாக வெளியேற்றவும் வன துறை அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்து உள்ளார்.
இவரது இந்த நடவடிக்கையை அனைவரும் மனதார பாராட்டி வருகின்றனர்.
நாளைய வரலாறு செய்திக்காக,
-V.ஹரிகிருஷ்ணன்,பொள்ளாச்சி கிழக்கு.
Comments