சென்னையில் நிவர் புயல்!! - கனமழையால் மெட்ரோ ரயில் பணி நடக்கும்போது பள்ளத்தாக்கு!!

      -MMH 

நிவர் புயல் காரணமாக சென்னையில் கனமழை பெய்து வரும் நிலையில், சென்ட்ரல் ரயில் நிலையம் எதிரே மெட்ரோ ரயில் பணிகள் நடைபெற்று வரும் இடத்தில் திடீரென பள்ளம் ஏற்பட்டுள்ளது.

வங்கக்கடலில் உருவான நிவர் புயல், அதீ தீவீரப்புயலாக வலுப்பெற்று, தற்பொழுது புதுச்சேரியை நெருங்குகிறது. புயல் கடக்க தொடங்கிய இடத்தில், 120 கி.மீ முதல் 140 கி.மீ வரை பலத்த காற்று வீசி வருகிறது. இந்த நிவர் புயலின் எதிரொலியாக கடலூர், சென்னை, திருவள்ளூர் ஆகிய மாட்டங்களில் பயங்கர காற்றுடனும், இடி, மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்து வருகிறது.

இந்நிலையில், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் எதிரே மெட்ரோ ரயில் பணிகள் நடைபெற்று வந்தது.

அப்பொழுது அங்கு திடீரென 20 அடிக்கு பள்ளம் உருவானது. அந்த பள்ளத்தை பொக்லைன் இயந்திரம் மூலம் சரிசெய்யும் பணியில் அதிகாரிகள் தீவிரமடைந்துள்ளனர்.

-சுரேந்தர்.

Comments