கோவையில் நாளை வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாம்!!
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்கவும், திருத்தம் செய்யவும் மாவட்டத்தின் அனைத்து ஓட்டு சாவடி மையங்களிலும் முதல்கட்டமாக நாளை சிறப்பு முகாம் நடக்கிறது.
கோவை மாவட்ட வரைவு வாக்காளர் பட்டியலை, கடந்த, 16ம் தேதி கலெக்டர் ராஜாமணி வெளியிட்டார். பட்டியலில் பெயர் விடுபட்டவர்கள், மற்றும் 2021 ஜன.,1 நிலவரப்படி 18 வயது பூர்த்தியடையும் நபர்கள் வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயர் சேர்க்க விண்ணப்பம் அளிக்கலாம்.
வாக்காளர் பட்டியலில், திருத்தங்கள், முகவரி மாற்றம், பெயர் நீக்கம், டிச., 15 வரை, வேலைநாட்களில் அனைத்து ஓட்டுப்பதிவு மையங்கள், ஆர்.டி.ஓ., மற்றும் தாலுகா அலுவலகங்களில் காலை, 10:00 மணி முதல் மாலை, 5:00 மணி வரை விண்ணப்பங்கள் பெறப்படும் என தெரிவிக்கப்பட்டுஉள்ளது. 21 (நாளை) மற்றும் 22ம் தேதிகளிலும், டிச., 12, 13 ஆகிய தேதிகளிலும் அனைத்து ஓட்டு சாவடி மையங்களிலும் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு விண்ணப்பங்கள் பெறப்படும்.
-அருண்குமார் கோவை மேற்கு.
Comments