மணப்பாறை அருகே கடன் வசூலிக்க வந்தவர் கட்டிலில் படுத்து அடாவடி!

 

-MMH

மணப்பாறை,திருச்சி மாவட்டம் வையம்பட்டி அருகே உள்ள காக்காயன் குளத்துபட்டியைச் சேர்ந்தவர் மதுநிஷா(37). கூலிவேலை செய்து வருகிறார். இவர் வையம்பட்டியில் உள்ள தனியார் பைனான்ஸ் நிதி நிறுவனத்தில் கடன் பெற்றுள்ளார். வாங்கிய கடனை முறையாக திருப்பி செலுத்தியும் வந்துள்ளார். தற்போது உச்சத்தில் இருக்கும் கொரோனா பரவல் காரணமாக வேலை இழப்பு ஏற்பட்டதால் வருமானமின்றி இருந்த மதுநிசாவால் வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியவில்லை என்றாலும் ஆங்காங்கே தெரிந்தவர்களிடம் உதவி கேட்டு மிகுந்த சிரமத்திற்கு இடையிலும் ஒரு சில கடன் தவணைகளை கட்டி வந்துள்ளார்.

இந்நிலையில், கூலிதொழிலாளியான மதுநிஷாவின் கணவர் வேலைக்காக வெளியூர் சென்றுவிட்டார். இதனால் அவர் மட்டும் வீட்டில் தனியாக இருந்தார்.அப்போது கடன் தொகையை கேட்டு மதுநிஷாவின் வீட்டுக்கு வந்த வையம்பட்டி பைனான்ஸ் வசூல்தாரர் மணிமுத்து என்பவர், தரக்குறைவான வார்த்தைகளில் பேசி அவரை அசிங்கப்படுத்தி பணம் வாங்காமல் இங்கிருந்து போகமாட்டேன் என்று கூறி மதுநினிஷாவின் வீட்டிற்குள் அடாவடியாக சென்று அவரது கட்டிலில் ஹாயாக கால் மேல் கால் போட்டு படுத்துக்கொண்டார். 

ஊரே வேடிக்கை பார்க்க மதுநிஷா அவமானத்தில் கூனிக்குறுகி நின்றுள்ளார். இதனை வீடியோ எடுத்து அப்பகுதியை சேர்ந்தவர்கள் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டனர். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட நிதி நிறுவனத்தின் அடாவடி வசூலை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

-பாரூக் சிவகங்கை.

Comments

Anonymous said…
😀😀