அ.ம.மு.க.வின் மாவட்ட நிர்வாகி பரபரப்பு பேட்டி...!!
தமிழ்மகன் ஜாபர் அவர்களை அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் மீனவர் அணியின் கோவை மாவட்ட செயலாளராக அ.ம.மு.க.வின் பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் அவர்கள் அறிவித்துள்ளார்.
புதிதாக பொறுப்பேற்றுள்ள மீனவர் அணி மாவட்ட செயலாளர் தமிழ்மகன் ஜாபர் அவர்கள் நமது இதழுக்கு அளித்த பேட்டி:
"முதலில் என்னை இந்த பதவிக்கு பரிந்துரை செய்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், அ.ம.மு.க.வின் மாவட்ட செயலாளருமான அண்ணன் மா.பா. ரோகினி அவர்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
என்னுடைய முதல் பணி மாவட்டம் முழுவதிலும் மீனவர் அணி நிர்வாகத்தை அமைத்து பொதுமக்களுக்கு, நம்மால் எந்த அளவிற்கு நலத்திட்ட உதவிகள் செய்திட முடியுமோ, அந்த அளவிற்கு செய்வதே என்னுடைய முதல் இலக்கு.
மற்ற மாவட்டங்களில் இல்லாத அளவிற்கு கோவை மாவட்டத்தில் ஆளும் கட்சியின் அத்து மீறல்கள் அதிகமாக உள்ளதை நான் உணர் கிறேன். இன்றைக்கு அவர்கள் பொருளாதார மேதை போல் பேசுகிறார்கள். அதிலும் கோவையில் கொஞ்சம் ஓவர் தான். கண்டிப்பாக வருகின்ற சட்டமன்ற தேர்தலில் எங்களுடைய பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் அவர்கள் தலைமையில் ஆட்சி அமையும். அப்போது இந்த மேதைகளுக்கு தக்க பாடம் புகட்டுவோம்'', என்று கூறினார்.
-நம்ம ஒற்றன்.
Comments