பட்டுக்கோட்டை அழகிரி சிலைக்கு உதயநிதி ஸ்டாலின் மாலை!!
அஞ்சாநெஞ்சன் பட்டுக்கோட்டை அழகிரி சிலைக்கு உதயநிதி ஸ்டாலின் மாலை அணிவிப்பு:
திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல் என்ற தலைப்பில் தமிழகம் முழுவதும் 100 நாள் பிரச்சாரம் மேற்கொண்டிருக்கிறார். அவர் நாகையில் உள்ள திருக்குவளையில் பேசும்பொழுது கைது செய்யப்பட்டு பின்பு விடுவிக்கப்பட்டார் அதன் பின்னர் தொடர்ந்து அவர் பல்வேறு இடங்களில் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.
நிவர் புயல் காரணமாக பிரச்சாரத்தை மூன்று நாட்கள் ஒத்திவைத்து சென்னை சென்ற அவர் மீண்டும் 28 ஆம் தேதியான நேற்று தஞ்சையில் பேரணியை தொடங்கினார் . தஞ்சாவூர் சங்கம் ஹோட்டலில் தங்கியிருந்த அவர் ஒரத்தநாடு பட்டுக்கோட்டை பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்டார் அப்பொழுது பட்டுக்கோட்டை அழகிரி சிலைக்கு மாலை அணிவித்து பிரச்சாரம் மேற்கொண்டார்.
அப்போது அவர் திராவிட இயக்கத் தலைவர்களில் ஒருவரான அஞ்சாநெஞ்சன் அழகிரிக்கு புகழாரம் சூட்டினார் . மேலும் அவர் பட்டுக்கோட்டை அழகிரி திராவிட இயக்கங்களுக்கு ஆசானாக திகழ்ந்தவர் என்று குறிப்பிட்டார். அப்பொழுது அவருடன் ஒரத்தநாடு எம்எல்ஏ மற்றும் தஞ்சை மத்திய மாவட்ட செயலாளர் துரை சந்திரசேகரன் உட்பட கட்சியினர் உடனிருந்தனர்.
நாளைய வரலாறு செய்திக்காக,
-ராஜசேகரன் தஞ்சாவூர்.
Comments