கோவை சுந்தரபுரத்தில் இளம் பெண்ணுக்கு பாலியல் தொல்லை! ஒருவர் கைது..!
கோவையில் 32 வயது இளம் பெண்ணுக்கு ஆபாசபடங்களை அனுப்பி பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்த நபரை போலீசார் கைது செய்து சிறையலடைத்தனர். கோவை சுந்தராபுரம் பகுதியைச் சேர்ந்த 32 வயதான இளம் பெண்ணை அதே பகுதியில் குடியிருந்த வந்த சந்திரன்(40) என்பவர் அடிக்கடி பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்து வந்துள்ளார்.
இதனையடுத்து அப்பகுதியினர் இணைந்து சந்திரனை விரட்டி அடிக்க சந்திரன் மலுமிச்சம்பட்டியில் தங்கி அதே பெண்ணுக்கு பாலியல் ரீதியாக தொல்லைகொடுத்து வந்துள்ளார்.இதனிடையே கடந்த சில தினங்களுக்கு முன் அந்த பெண்ணின் நிர்வாண புகைப்படத்தை அவளது கணவருக்கு அனுப்பியதாக தெரிகறது.
இதுதொடர்பாக அந்த பெண் குனியமுத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில் சந்திரனை கைது செய்த போலீசார் நடத்திய விசாரணையில், அந்தப் பெண்ணுக்கும், சந்திரனுக்கும் நீண்ட நாட்களாக கள்ள தொடர்பு இருந்து வந்ததுள்ளது. சந்திரன் அப்பெண்ணுடன் தனிமையில் இருக்கும் போது தனது செல்போனில் போட்டோக்களை எடுத்துள்ளார்.
இதனால் சந்திரனின் நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த அப்பெண் சந்திரனிடம் பேசாமல் தொடர்பை துண்டித்ததும், அதனால் ஆத்திரம் அடைந்த சந்திரன் இருவரும் தனிமையில் இருந்த ஆபாச புகைப்படங்களை அனுப்பியதும் தெரியவந்தது. இதனை அடுத்து பாதிக்கப்பட்ட பெண் கொடுத்த புகாரின் அடிப்படையில் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் சந்திரனை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
-சீனி போத்தனூர்.
Comments