வால்பாறை சிறுகுன்றா எஸ்டேட் பகுதியில் காட்டு யானைகள் கூட்டம் முகாம்!! - அச்சத்தில் பொதுமக்கள்!!
பொள்ளாச்சி அடுத்த வால்பாறை தேயிலைத் தோட்டங்கள் நிறைந்த அடர்ந்த வனப்பகுதி ஆகும். இந்த வனப்பகுதியில் யானைகள் உள்ளிட்ட வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. அதேசமயம் மக்களும் வாழ்ந்து வருகின்றனர்.
உணவைத் தேடி அடிக்கடி காட்டு யானைகள் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வரும் நிலையில் தற்பொழுது கேரள வனப்பகுதிக்குள் இருந்து காட்டு யானைகள் வால்பாறை வனப் பகுதிக்கு இடம் பெயர்ந்து வருவதாக தகவல். இந்நிலையில் சிறுகுன்றா எஸ்டேட் பகுதியில் காட்டு யானைகள் கூட்டம் முகாமிட்டுள்ளது. அந்த வழியாகச் சென்ற வனத்துறை வாகனத்தை துரத்தி பயமுறுத்தி உள்ளது. மேலும் யானைக் கூட்டம் சாலையை கடந்தும் தேயிலைத் தோட்ட தொழிலாளர்கள் குடியிருப்புக்களை கடந்தும் செல்கின்றனர். இதனால் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். இதனை அடுத்து வனத்துறை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
-M.சுரேஷ்குமார்,கோவை தெற்கு.
Comments