தஞ்சாவூரில் பிளாஸ்டிக் குடோனில் பெரும் தீ விபத்து!

-MMH

தஞ்சாவூர் ஆடக்கார  தெருவில் ரமேஷ் என்பவருக்கு சொந்தமான மிகப்பெரிய பிளாஸ்டிக் குடோன் உள்ளது. அது தற்போது எதிர்புறம் உள்ள புதிய இடத்திற்கு மாற்றப்பட்டு அங்கு செயல்பட்டு வந்தது  .பழைய குடோனில்  பழைய பிளாஸ்டிக் பொருட்களை சேமித்து வைத்திருந்தனர் . நேற்று கார்த்திகை திருநாள் கொண்டாடப்பட்ட நிலையில் ஆங்காங்கே சிறுவர்கள் பட்டாசு மற்றும் வெடிகளை வெடித்து கொண்டிருந்தனர்.

அப்பொழுது குடோன் திடீரென  தீ பற்றி எரிந்தது தீயணைப்புத் துறையினர் விடிய விடிய போராடியும்  தீயை கட்டுக்குள் கொண்டு வர இயலவில்லை. திருவையாறு , தஞ்சாவூர்  ஆகிய ஊர்களில் இருந்து   தீயணைப்பு வாகனம் வந்த நிலையில் தீயணைப்பு வீரர்கள் கடுமையாக போராடினர். தீ விபத்தில் சுமார் 20 லட்சம் மதிப்புள்ள பிளாஸ்டிக் பொருள்கள் எரிந்து சேதம் அடைந்ததாக அதன் உரிமையாளர் கூறினார். மேலும் தஞ்சை கிழக்கு காவல் நிலையத்தில் வழக்கு பதியப்பட்டுள்ளது. விபத்திற்கான காரணம் குறித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது.

நாளைய வரலாறு செய்திக்காக,

-ராஜசேகரன், தஞ்சாவூர்.

Comments