வேகமாக வந்த லாரி.. விபத்துக்குள்ளான பேருந்து.. மக்கள் அதிர்ச்சி..!!

    -MMH

     கோவை மாவட்டம் போத்தனூர் அன்பு நகர் பகுதியில் அதிவேகமாக வந்த லாரி ஒன்று பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்த பேருந்து மீது பின்பகுதியில் மோதி விபத்தை ஏற்படுத்தியது. இந்த விபத்தில் 50 வயது மதிக்கத்தக்க ஒருவர் காயமடைந்தார்.

இதுபோன்ற விபத்துக்கள் அந்தப் பகுதியில் அடிக்கடி நடைபெறுவதாக அங்குள்ள பொதுமக்கள் கூறுகின்றனர். செட்டிபாளையத்தில் இருந்து வரும் வாகனங்கள் அதிவேகமாக வருவதாகவும் அன்பு நகர் ஈஸ்வர் நகர் போன்ற நெருக்கமான பகுதிகளில் வரும் பொழுது 60 லிருந்து 80 கிலோ மீட்டர் வரை அதிவேகமாக வருவதாகவும். அப்படி வரும்பொழுது விபத்துகள் நடைபெறும் என்றும் கூறுகின்றனர்.

இதுபோன்ற விபத்தை தடுப்பதற்கு வேகத்தை கட்டுப்படுத்தும் பதாதைகளை வைக்க வேண்டும் என்றும் டிவைடர் போன்றவற்றை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

-ஈஷா,கோவை.

Comments