பொள்ளாச்சியில் சீட்டாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைது..!
பொள்ளாச்சி அடுத்த சோலனூரில் தனியார் தோட்டத்தில் பணம் வைத்து சீட்டாட்டம் நடைபெறுவதாக பொள்ளாச்சி தாலுகா காவல் நிலையத்திற்கு தகவல் கிடைத்தது தகவலின்பேரில் அதிகாரி ராஜேஷ் கண்ணா மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சீட்டாடும் நபர்களை சுற்றிவளைத்தனர் அப்பொழுது பணம் வைத்து சீட்டாட்டத்தில் கலந்து கொண்ட பொள்ளாச்சி சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த கணபதி, காளீஸ்வரன், முருகானந்தம், ராஜசேகரன், பாலகிருஷ்ணன், சதீஷ்குமார், ரவிச்சந்திரன் உட்பட 10 பேர் கைது செய்யப்பட்டனர் அவர்களிடமிருந்து சூதாட்டத்திற்கு பயன்படுத்தப்பட்ட 1 லட்சத்து 47 ஆயிரத்து 130 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.
-M.சுரேஷ்குமார் கோவை தெற்கு.
Comments