அமித்ஷாவின் கேள்விக்கு பதில் தரும் சாமானியர்...!
போய்யா போய்யா புண்ணாக்கு.. போடாதே தப்புக்கணக்கு.....
அறிவை அடமானம் வைத்து விட்ட ஈபிஎஸ் ஓபிஎஸை நம்பி உளறிக்கொட்டிவிட்டு போயிருக்கிறார் உள்துறை அமைச்சர் அமித்ஷா....
தமிழகத்திற்கு ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி என்ன செய்தது என கேள்வி கேட்டிருக்கிறார்....
அவர் மட்டுமல்ல நம் மாநில மக்களும் ஏன் நமது காங்கிரஸ் சொற்பொழிவாளர்களே கூட தெரிந்துகொள்ள வேண்டியவைகளை நாம் சொல்லாமல் யார் சொல்வது?
தமிழகத்திற்கு அன்னை சோனியாகாந்தியின் பத்தாண்டுகால அரசு செய்த பேருதவியும் பெருந்திட்டங்களும்......
காங்கிரஸின் 2004 முதல் 2014 ஆம் ஆண்டுவரை அன்னை சோனியாகாந்தி வழிகாட்டுதலில் பேரறிஞர் மன்மோகன்சிங் பிரதமராக இருக்கும்போது தமிழகத்திற்கு கிடைத்த திட்டங்களின் மூலம்தான் பிரம்மாண்ட வளர்ச்சியை பெற்றது நம் தமிழகம் இன்றைக்கு நன்றிகொன்றுவிட்டு சிறுசிறு குழுத்தலைவர்களின் பின்னால் சென்றுகொண்டிருக்கும் சிறுபான்மையினர் மீது அன்புகாட்டி அரவணைத்தவர்கள் காங்கிரஸார் ஆம் அவர்கள்மீது அடக்குமுறையை காட்டுத்தனமாக ஏவிய,
"பொடா" சட்டத்தை ரத்து செய்திருக்கிறது காங்கிரஸ் கூட்டணி....
காவிரி இறுதித் தீர்ப்பை பெற்றது அதை அரசானையில் வெளியிட்டது....
அன்னை தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து பெற்றது....
காமராஜர் எண்ணூர் துறைமுகத்தை நாட்டுக்கு அர்ப்பணித்தது....
செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம் அமைத்தது....
4576 கிலோமீட்டர் தேசிய நெடுஞ்சாலைகளில் 3276 கிலோமீட்டர் நெடுஞ்சாலைகள் ரூபாய் 56 ஆயிரம் கோடி மதிப்பில் நான்குவழி சாலைகள் மேம்பாலங்கள் துறைமுக விரிவாக்கப் பணிகள் போன்றவற்றை செய்தது காங்கிரஸ் ஆட்சி.....
சென்னை அருகில் உள்ள ஒரகடத்தில் ரூபாய் 470 கோடி மதிப்பீட்டில் தேசிய ஆட்டோமொபைல் (ஆர் அண்ட் டி) நிறுவனமும் இதர உட்கட்டமைப்பு வசதிகளும் ஏற்படுத்தியது.....
ரூபாய் ஆயிரத்து 553 கோடி மதிப்பீட்டில் சேலம் ரோலிங் மில்லை சர்வதேச தரத்திற்கு தரம் உயர்த்தியது.....
தாம்பரத்தில் தேசிய சித்த மருத்துவ ஆராய்ச்சி நிலையம் நிறுவியது.....
சேலத்திற்கு என தனி ரயில்வே கோட்டம் ஏற்படுத்தியது.....
ரூபாய் 120 கோடி மதிப்பீட்டில் சேலத்தில் உள்ள மோகன் குமாரமங்கலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையாக தரம் உயர்த்தியது என சாதனை செய்தது காங்கிரஸ் ஆட்சி......
சேதுக்கால்வாய் திட்டம் ரூபாய்1765 கோடி மதிப்பீட்டில் சென்னை துறைமுகம் மதுரவாயல் பறக்கும் சாலை திட்டம் தொடங்கியது.....
பாஜக ஆட்சி முடக்கி வைத்திருந்த ரூபாய் 2427 கோடி மதிப்பீட்டில் சேது சமுத்திரத் திட்டத்தை மீண்டும் துவக்கியது எல்லாமே காங்கிரஸ் கட்சியின் ஆட்சியில்தான்.....
இவை தவிர சென்னை மாநகர மக்களின் தாகத்தைத் தீர்த்து வைக்கும் ரூபாய் 908 கோடி மதிப்பீட்டில் நெம்மேலியில் கடல் நீரை சுத்திகரிக்கும் திட்டம்......
ரூபாய் 640 கோடி மதிப்பீட்டில் சென்னை மற்றும் எண்ணூர் துறைமுகங்களை இணைக்கும் சாலைகளை அகலப்படுத்தும் திட்டம் செயல்படுத்தப்பட்டது காங்கிரஸ் ஆட்சியில்தான்......
அனைத்து மீட்டர் கேஜ் ரயில் பாதைகளையும் கேஜ் ரயில் பாதையை களாக மாற்ற ஒப்புதல் கொடுத்தது காங்கிரஸ் ஆட்சி......
ரூபாய் ஆயிரத்து 828 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 90 ரயில்வே மேம்பாலங்கள் மற்றும் சுரங்கப் பாதைகள் அமைத்தல் போன்றவற்றை சாதித்தது காங்கிரஸ் கட்சி.......
நேற்று அமித்ஷாஅடிக்கல் நாட்டினார் மெட்ரோ ரயில் திட்டம் இப்படி ஒரு திட்டத்தை முதன் முதலில் சென்னைக்கு கொண்டு வந்து ரூபாய் 14 ஆயிரத்து 600 கோடி ரூபாய் மதிப்பில் சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தை துவக்கி வைத்து முக்கால்வாசி பணிகளை முடித்து வைத்தது அன்னை சோனியா காந்தியின் வழிகாட்டுதலில் பேரறிஞர் மன்மோகன்சிங் பிரதமராக இருக்கும்போதுதான் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி......
தமிழகத்திலே மதச்சார்பற்ற கூட்டணியில் ஒப்பில்லாத ஆட்சி நடந்த போது நடந்த திட்டங்கள் என்பதை எவராலும் மறுக்க முடியாது.....
திருவாரூர் மத்திய பல்கலைக்கழகம்.......
1928 கோடி மதிப்பில் ஒகேனக்கல் குடிநீர் திட்டத்தை நிறைவேற்றியது.....
சர்வதேச தரத்தில் தேசிய கடல்சார் பல்கலைக்கழகம் அமைத்தது.......
திருவாரூரில் தேசிய பல்கலைக் கழகத்தை உருவாக்கியது.....
திருச்சியில் இந்திய மேலாண்மை கல்வி நிறுவனம் அதாவது இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மென்ட் தோற்றுவித்தது......
ஆசியாவிலேயே முதல்முறையாக சென்னையில் நேஷனல் இன்ஸ்டிடியூட் ஃபார் எம்பவரிங் பேர்சன்ஸ் வித் மல்ட்டி பில் டிசெபிலிடீஸ் என்ற நிறுவனத்தை உருவாக்கியதும்........
பாதுகாப்புதுறையின் கீழ் வரும் மத்திய அதிரடிப்படை மையம் ஒன்றை தமிழகத்தில் சாதித்துக் காட்டியதும் காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் தான் என்பதை உள்துறை அமைச்சர் அமித் ஷா பழைய விவரங்கள் தெரிந்த அறிவுள்ள அதிகாரிகளிடம் கேட்டு தெரிந்து கொள்ளலாம்......
அதுமட்டுமல்ல ரூபாய் 72 ஆயிரம் கோடி கடன் தள்ளுபடி செய்தது காங்கிரஸ் அரசுதான்.......
3 வேளாண் கருந்திட்டங்களை கொண்டு வந்து நாடு முழுவதும் விவசாயிகளின் போராட்ட களத்தை உருவாக்கி,
இன்றைக்கு கார்ப்பரேட் கம்பெனிகளின் கையாட்களாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது மத்திய பாஜக அரசும் தமிழ்நாடு அதிமுக அரசும்
விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்யமுடியாது என்று கூறி வருகிறது பாஜக அரசு,
ஆனால் 77ஆயிரம் கோடி விவசாய கடன் மற்றும் வட்டியை தள்ளுபடி செய்தவர்கள் நாங்கள்......
எங்களுடைய அன்னை சோனியா காந்தி அவர்களுடைய ஆலோசனைப்படி
பிரதமர் மன்மோகன் சிங் அவர்களால் மத்தியிலே 70 ஆயிரம் கோடியும் மாநிலத்திலே கலைஞர் அவர்கள் தலைமையில் 7 ஆயிரம் கோடி ரூபாய் தள்ளுபடி செய்யப்பட்டது வரலாற்றுச் சாதனை.......
மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனங்களில் பிற்படுத்தப்பட்டோருக்கு 27 சதவீத இட ஒதுக்கீடு உறுதி செய்து கொடுத்தது காங்கிரஸ் கட்சி........
மத்திய பாஜக அரசு அதிமுகவுடன் கூட்டணி வைத்து தமிழகத்திற்கு செய்தது என்ன?
தமிழகத்தை அழித்தது சமூகநீதியை ஒழித்தது இட ஒதுக்கீட்டை பால்படுத்தும் வகையில் செயல்படுவது.
நீட் தேர்வு ரத்து மசோதாவை நிராகரித்தது.
ஹைட்ரோ கார்பன் திட்டம் கொண்டு வந்து காவிரி டெல்டாவை பாலைவனமாக்கியது.
தமிழ் செம்மொழி நிறுவனத்தை முடக்கியது.
ஸ்டெர்லைட் துப்பாக்கி சூடு நடத்தி 13 உயிர்களை குடித்தது குடித்தது.
இது மட்டுமா? உதய்திட்டம் என்ற புதிய மின்சார திருத்தச் சட்டங்கள் மூலம் விவசாயிகளின் இலவச மின்சாரத்தை பறிக்க முயற்சி.
பணமதிப்பிழப்பு நடவடிக்கை மூலம் தமிழகத்தில் உள்ள தொழில் நகரங்களை எல்லாம் விழுத்தியது.
தமிழகத்தில் நிகழ்ந்த எந்த பேரிடர் அழிவுகளுக்கும் கேட்கும் நிதியை கொடுக்காதது.
யானைப் பசிக்கு சோளப்பொறி போட்டு தன் கட்சிக்காரர்களை விட்டு கேலி செய்ய வைத்தது என,
தமிழகத்திற்கு பாஜக செய்தது கொஞ்சநஞ்சமல்ல:
15வது நிதி ஆணையத்தில் தமிழ்நாட்டிற்கு இழைக்கப்பட்ட அநீதியை தீர்த்து வைத்து விட்டீர்களா?
கொரோனா கொடுந்தொற்றுக்கு மருத்துவ உபகரணங்கள் வாங்க அதிமுக அரசு கேட்ட நிதியைக் கொடுத்து விட்டீர்களா?
ஜிஎஸ்டி மூலம் இதுவரை தமிழகத்தில் கிடைத்த நிதி எவ்வளவு? அதில் தமிழ்நாட்டிற்கு நீங்கள் செலவிட்டது எத்தனை கோடி?
வடமாநிலங்களுக்கு வாரி கொடுத்தது எவ்வளவு கோடி?
தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த வருவாயையும் மத்திய அரசு எடுத்துக் கொண்டு ஏதோ "கொண்டைக் கடலையும் பட்டாணியும்" கொடுப்பது போல சின்ன சின்ன உதவிகளை செய்துவிட்டு உள்துறை அமைச்சராக இருப்பவர் இப்படிப் பேசுவது வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சுவது போல உள்ளது.
உண்மை என்னவென்றால் இன்றைக்கு தமிழ்நாடு மத்திய அரசுக்கும் வட மாநிலங்களுக்கும் அதிகமான நிதியை கொடுத்து வருகிறது,
ஆனால் மத்திய பாஜக அரசு தமிழ் மொழியை புறக்கணித்தது இந்தி திணிப்பு மத துவேஷம் உருவாக்குவது சமூக நல்லிணக்கத்தை ஏற்படுத்துவது போன்ற இன்னல்களை மட்டுமே இதுவரை தமிழ்நாட்டிற்கு செய்து வருகிறது!
இதை தவிர வேறென்ன செய்திருக்கிறது? போதாக்குறைக்கு சனாதன கொள்ளிச்சட்டியை வேறு தலையில் சுமந்துகொண்டு அமைதிப் பூங்காவான தமிழகத்தை ஆட்டுவிக்கும் அழிவு சக்தியாக தான் அமித்ஷாவின் வருகையும் பேச்சும் இங்கு இருக்கிறது
தமிழகம் ஒருக்காலும் இவர்களை ஏற்றுக் கொள்ளாது இது வீரம் விளைந்த பூமி.
காங்கிரஸ் கட்சிக்காக இந்த தமிழ் மண்ணில் உயிர் கொடுக்கும் ஆயிரக்கணக்கானவர்கள் இருக்கிறார்கள் இங்கே மதவாத சக்திகளுக்கு இடம் இல்லை மொத்தத்தில் ஒரே வரியில் சொல்லவேண்டும் என்றால்.
Comments