நெட்ஒர்க் ஸ்பீட் இல்லையா? - இதை செய்து பாருங்கள்!!
இப்போதெல்லாம் அனைத்து ஸ்மார்ட்போன்களும் 4ஜி ஆதரவுடன் தான் வருகின்றன, ஆனால் பலர் நெட்வொர்க் சிக்கலால் வருத்தப்படுகிறார்கள். 4ஜி நெட்வொர்க் நகரங்களில் சிறப்பாக உள்ளது, ஆனால் கிராமத்தில் இன்னும் மோசமாக தான் உள்ளது.
நெட்வொர்க் 3 ஜி அல்லது 4 ஜி ஆக இருந்தாலும், இணைய வேகம் நன்றாக இருந்தால் எந்த பிரச்சனையும் இல்லை, ஆனால் 4ஜி நெட்வொர்க் கிடைத்தும் வேகமில்லாமல் இருந்தால் அதைவிட இணையவாசிகளுக்கு கடுப்பான விஷயம் எதுவும் இல்லை. ஏனெனில் சில நேரங்களில் சரியான நேரத்தில் செய்துமுடிக்க வேண்டிய வேலைகளும் இதனால் தடைப்படும்.
ஆகவே, ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களில் 4 ஜி நெட்வொர்க்கின் வேகத்தை எவ்வாறு அதிகரிப்பது என்பதை இப்போது பார்க்கலாம்.
உங்கள் பகுதியில் செப்பு கேபிளுக்கு பதிலாக ஃபைபர் கேபிள் பயன்படுத்தப்பட்டால், நெட்வொர்க் வேகம் நன்றாக இருக்கும், மேலும் நல்ல இணைய வேகமும் கிடைக்கும். இதனால் தான் ஏர்டெல்லின் வேகத்தை விட ஜியோ ஃபைபர் வேகம் சிறப்பாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
உங்கள் இணையம் மெதுவாக இயங்கினால், முதலில் தொலைபேசியின் அமைப்புகளைச் (Settings) சரிபார்க்கவும். தொலைபேசியில், Settings> Network Settings க்குச் சென்று preferred network type எனும் விருப்பத்தில் 4G அல்லது LTE என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
நெட்வொர்க் அமைப்புகளில் Access Point Network (APN) அமைப்பையும் சரிபார்க்கவும், ஏனெனில் வேகத்திற்கு சரியான APN இருப்பது அவசியம். APN அமைப்புகளின் மெனுவுக்குச் சென்று default setting ஐ அமைக்கவும்.
இது தவிர, தொலைபேசியில் சமூக ஊடக செயலிகளிலும் சில அமைப்புகளை மாற்றுங்கள். பேஸ்புக், ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற பயன்பாடுகள் அதிக தரவைப் பயன்படுத்தி வேகத்தைக் குறைக்கக்கூடும். இது போன்ற சமயங்களில் அவற்றின் Settings க்குச் சென்று ஆட்டோ-பிளே வீடியோ விருப்பத்தை ஆஃப் செய்ய வேண்டும். மேலும், தொலைபேசியின் உலாவியை Data Saver பயன்முறையில் அமைக்க வேண்டும்.
-ஸ்டார் வெங்கட்.
Comments