பெரியகுளத்தில் காவலன் செயலி குறித்து விழிப்புணர்வு பேரணி..!

  

-MMH

பெரியகுளம் காவலன் செயலி குறித்து பெரியகுளத்தில் காவல்துறையினா் சாா்பில் சனிக்கிழமை விழிப்புணா்வு பேரணி நடைபெற்றது. இதை, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் சாய்சரண் தேஜஸ்வி தொடக்கி வைத்தாா். அரசு போக்குவரத்துக் கழகம் முன்பாக தொடங்கிய இந்த பேரணி வடகரை மற்றும் மூன்றாந்தல், கடைவீதி வழியாக சென்று பழைய பேருந்து நிலையத்தில் முடிவடைந்தது. பேரணியின் போது, பொதுமக்கள் தங்கள் பகுதியில் நடைபெறும் குற்றங்களை காவல்நிலையத்திற்கு உடனடியாக தகவல் தெரிவிப்பது குறித்தும், காவலன் செயலி குறித்தும் விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது. இதில் 400 காவலா்கள் பங்கேற்றனா்.

நாளைய வரலாறு  செய்திக்காக,

-ஆசிக் தேனி.

Comments