கோவை உயிரியல் பூங்கா திறக்காததால் மக்கள் ஏமாற்றம்...!
கோவையில் உள்ள மிருக சாலை மற்றும் வா உ சி பூங்கா கோவை மாவட்ட மக்களுக்கு பொழுதுபோக்கு இடமாக அமைந்து இருந்தது. மேலும் மிருக சாலையில் வெளிநாட்டுப் பறவைகள், கிளி வகைகள் குரங்குகள், ஒட்டகம் ,முதலைகள் , பாம்பு இனங்கள் போன்ற வனவிலங்குகள் மக்கள் பார்வைக்காக இங்கு வைக்கப்பட்டு இருந்தது.
இந்த விலங்குகளை காண கோவை மட்டுமல்லாமல் மேட்டுப்பாளையம் திருப்பூர் போன்ற பகுதிகளில் இருந்தும் மக்கள் மிருகக் சாலைக்கு வந்து வனவிலங்குகளை கண்டு மகிழ்ந்து செல்வர். தற்பொழுது கொரானா வைரஸ் காரணமாக கடந்த 7 மாதங்களாக மிருக சாலை மற்றும் வா உ சி பூங்கா திறக்கப்படாததால் மக்கள் வருத்தம் அடைகின்றனர். மேலும் சனி ஞாயிறு போன்ற விடுமுறை நாட்களில் நூற்றுக்கணக்கான மக்கள் இங்கு வந்து செல்வார்கள் இந்த மக்களை நம்பி அங்கே கடை வைத்திருந்த சிறு வியாபாரிகளுக்கும் வியாபாரம் இல்லாததால் அவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாக உள்ளது
-அருண்குமார் கோவை மேற்கு.
Comments