அரசு பள்ளி வகுப்பறையில் தொடர் வண்டி ஓவியம்!

 

-MMH

புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அருகே அரசுப் பள்ளி மாணவர்கள் ஓவியக்கலையை வளர்த்துக்கொள்ளும் விதமாக, பள்ளி   வகுப்பறையின் சுவற்றில் ரயில் ஓவியம் வரையப்பட்டுள்ளது. லெக்கணாபட்டி அரசு உயர்நிலைப் பள்ளியில் 230 மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்த பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்கள், தொடர் ரயிலை நேரில் பார்த்திடாத கிராம மாணவர்கள் அதனை அறிந்துகொள்ளவும், ஓவியக்கலையை வளர்த்துக்கொள்ளும் வகையிலும் வகுப்பறையில் தொடர் வண்டி ஓவியத்தை வரைந்துள்ளனர். 

-அருண்குமார் கோவை மேற்கு.

Comments