கம்பத்தில் சிறுபான்மை நலக் குழு சார்பில் ஆர்ப்பாட்டம்!!

   -MMH

     கம்பம்: தேனி மாவட்டம் கம்பத்தில் சிறுபான்மை நலக் குழு சார்பில் குடியுரிமைச் சட்டத்தை எதிர்த்து ஆர்ப்பாட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

மத்திய அரசு குடியுரிமை பதிவேடு பணிகள் துவங்குவதை கைவிட வேண்டும், சிறுபான்மை உரிமைகளுக்காக போராடியவர்கள் மீது வழக்குகளை திரும்ப பெற வேண்டும், எனக் கோரி தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு சார்பில் கம்பம் வடக்கு காவல் நிலையம் அருகே ஆர்பாட்டம் நடைபெற்றது. 

ஆர்பாட்டத்திற்கு மாவட்ட பொறுப்பாளர் கே.அக்பர் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் நாகராஜன், வாவேர்பள்ளிவாசல் ஜமாத் கமிட்டி தலைவர் எம்.பி.எம். பக்ரூதீன், திமுக செயலாளர் துரை. நெப்போலியன், காங்கிரஸ் தலைவர் போஸ், மதிமுக செயலாளர் வி.எஸ்.கே. ராமகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் செயலாளர் எம்.வி.கல்யாண சுந்தரம் மற்றும் பல்வேறு அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

நாளைய வரலாறு  செய்திக்காக,

-ஆசிக்,தேனி.

Comments