அமைச்சர் துரைக்கண்ணு உடல் நல்லடக்கம்!! - பொதுமக்கள் கண்ணீர் அஞ்சலி!!
-MMH
அமைச்சர் துரைக்கண்ணு வின் உடல் மாலை அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது பின்னர் பொதுமக்கள் அரசு அதிகாரிகள் அமைச்சர் பெருமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக அவரது புகைப்படம் வைக்கப்பட்டது, அஞ்சலி செலுத்திய பின்னர் அமைச்சருக்கு சொந்தமான தோட்டத்தில் அமைச்சர் துரைக்கண்ணு வின் உடல் முழு அரசு மரியாதையுடன் 21 குண்டுகள் முழங்க நல்லடக்கம் செய்யப்பட்டது, அவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இறந்ததால் சுகாதாரத்துறை அதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டது.அமைச்சரின் மறைவால் தஞ்சையில் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டு இருந்தது.
நாளையவரலாறு செய்திக்காக,
-இராஜசேகரன்,தஞ்சை.
Comments