சிங்கம்புணரியில் தீயணைப்புத் துறையினர், கடைகளுக்கு சென்று கொரோனா விழிப்புணர்வுப் பிரச்சாரம்!!

     -MMH


     சிங்கம்புணரியில் தீயணைப்புத் துறையினர், கடைகளுக்கு சென்று கொரோனா விழிப்புணர்வுப் பிரச்சாரம்.


சிவகங்கைமாவட்டம் சிங்கம்புணரியில், தீயணைப்புத் துறையினர் திரு. சீ.பிரகாஷ் அவர்கள் தலைமையில் மக்கள் அதிகமாக கூடும் துணிகடைகள், நகைகடைகள் மற்றும் வணிக நிறுவனங்களில் கொரோனா விழிப்புணர்வு பிரச்சாரம் செய்யப்பட்டது.



அணைவரும் முககவசம் அணியவேண்டும்,கைகளை கிருமி நாசினி கொண்டு கழுவவேண்டும். கைகளை கழுவாமல் கண் மூக்கு மற்றும் வாய் பகுதிகளை தொடுவதை தவிர்க்கவேண்டும்,
சமூக இடைவெளி,சுற்றுச்சூழலை சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும்,தும்மல் இருமலின் போது வாய் மூக்குப் பகுதிகளை துணி மற்றும் டிஸ்யூ கொண்டு மூடிகொள்ளவேண்டும்.



கபசுரக் குடிநீர், நோய் எதிர்ப்பு சக்தி உள்ள உணவுபொருட்கள் எடுத்துக்கொள்ளுதல் மற்றும் சளி காய்ச்சல் இருந்தால் உடனடியாக மருத்துவ பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் போன்ற விழிப்புணர்வு பிரசாரம் செய்யப்பட்டது.


-ஃபாரூக்,சிவகங்கை.


Comments