கோவையில் வீடு புகுந்து மூதாட்டியிடம் 8 சவரன் செயின் பறிப்பு!!

  -MMH 

     கோவை 17-11-20 : கோவை சுந்தராபுரம் பகுதியை சேர்ந்தவர் நடராஜன். இவரது மனைவி காளியம்மாள் (71). தனது மகன், மருமகள், பேத்தியுடன் வசித்து வருகிறார். இந்நிலையில் நேற்று அவரது மகன், மருமகள் இருவரும் வெளியே சென்ற நிலையில் பேத்தியுடன் வீட்டு வேலைச் செய்து கொண்டிருந்ததாக தெரிகிறது. அப்போது சுமார் 7 மணியளவில் திடிரென வீட்டிற்கு புகுந்த மர்ம நபர் ஒருவர் மூதாட்டியை மிரட்டி அவர் அணிந்திருந்த 8 சவரன் செயினை பறித்து விட்டு, வீட்டு வாசலில் இரு சக்கர வாகனத்தில் காத்திருந்த மற்றொரு மர்ம நபருடன் தப்பி சென்றுள்ளார். இதையடுத்து காளியம்மாள் சத்தம் போட்டுள்ளார். இதையடுத்து அங்கிருந்தவர்கள் போத்தனூர் போலீஸுக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு மேற்கொண்டு செயினை பறித்து தப்பி சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

-சீனி,போத்தனூர்.

Comments

Anonymous said…
Thirudarkal pidikkappattarkala...
Anonymous said…
😱😱😱