சிதிலமடைந்த மின் கம்பம் சீரமைப்பது எப்போது❓❓
-MMH
உடுமலை:உடுமலை, வாசவி நகரில் சிதிலமடைந்த நிலையில் இருக்கும் மின்கம்பத்தை சீரமைக்க மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.உடுமலை, பொள்ளாச்சி ரோட்டிலிருந்து, தாராபுரம் ரோடு செல்லும் பிரதான இணைப்பு பகுதியாக வாசவி நகர் உள்ளது.
இரண்டு சக்கர வாகன ஓட்டிகள் பெரும்பான்மையாக இந்த வழித்தடத்தை பயன்படுத்துகின்றனர்.வாசவி நகரிலிருந்து, தாராபுரம் ரோட்டுக்கு செல்லும் வழியில் மின் கம்பம் ஒன்று சிதிலமடைந்துள்ளது. இவ்வழியாக, மக்கள் மாலை நேரங்களில் நடைபயிற்சியும் செய்கின்றனர்.
இக்கம்பம் எந்த நேரத்திலும் விழும் நிலையில் இருப்பதால், மக்கள் அச்சமடைந்துள்ளனர்.மின் விபத்து அல்லது மக்களுக்கு ஆபத்து ஏற்படும் முன், மின் கம்பத்தை சீரமைக்க மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
நாளையவரலாறு செய்திக்காக,
முஹம்மது ஹனீப்,திருப்பூர்.
Comments