பல்லடத்தில் இரவிலும் காத்திருந்த மக்கள்!!!!
-MMH
பல்லடம்;அதிகளவில், மக்கள் கூடியதால், பல்லடம் பத்திரப்பதிவு அலுவலகம், நேற்று முன்தினம் இரவிலும் செயல்பட்டது.பல்லடம் பத்திரப்பதிவு அலுவலகத்தில், நேற்று முன்தினம் இரவு 9:00 மணிக்கும் பத்திரப்பதிவு பணி நடந்தது.இது குறித்து, பொதுமக்கள் கூறியதாவது:பல்லடம் பத்திரப்பதிவு அலுவலகத்தில் இரு பதிவாளர் வேண்டும்.
ஆனால், சில மாதங்களாக ஒரு பணியிடம் நிரப்பப்படாமல் உள்ளது. முன்கூட்டியே டோக்கன் பெற்று வந்தாலும், குறிப்பிட்ட நேரத்துக்கு பணிகள் முடிவதில்லை.மாலை அல்லது இரவு வரை காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. முகூர்த்தம், மற்றும் விஷேச நாட்களில், வழக்கத்தை காட்டிலும் அதிகமானோர் வருகின்றனர். இன்று (நேற்று முன்தினம்) 200 டோக்கன் வினியோகிக்கப்பட்ட நிலையில், மாலை வரை, 120 டோக்கன் மட்டுமே முடிவடைந்தன.
இதனால், பல நாட்களாக இரவிலும் பணிகள் நடக்கின்றன. பெண்கள் மற்றும் முதியோர் இரவு வரை காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. எனவே, காலியாக உள்ள பத்திரப்பதிவாளர் பணியிடத்தை நிரப்புவதுடன், டோக்கன் அடிப்படையில் முறையாக பணிகள் நடக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
நாளையவரலாறு செய்திக்காக,
-முஹம்மதுஹனீப்,திருப்பூர்.
Comments