சென்னை டாக்டர் மகன் ஆற்றில் மூழ்கி பலி...!

       -MMH


மடத்துக்குளம்;மடத்துக்குளம் அருகே கடத்தூர், அமராவதி ஆற்றில், மூழ்கிய மகனைக் காப்பாற்றும் முயற்சி, தோல்வியடைந்து தந்தை மகன் இருவரும் பலியானார்கள்.திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளம் கணியூர் பகுதியை சேர்ந்த ஜோதிலிங்கம் 42; சென்னை ஓமந்துாரார் அரசு மருத்துவமனையில் இருதய பிரிவு மருத்துவர்.


தனது சொந்த ஊரான கணியூருக்கு வந்துள்ளார்.நேற்று மதியம் இவர் தனது மகன் சர்வேஸ் ராஜா, 11 மற்றும் சிலருடன் கடத்துார் அர்ச்சனேஸ்வரர் கோவில் முன் செல்லும், அமராவதி ஆற்றில் குளித்துக் கொண்டிருந்தார்.


ஆற்றில் குறைந்தளவே நீரோட்டம் இருந்ததால், தண்ணீர் தேங்கியிருந்த பகுதிக்கு சென்று குளித்துள்ளனர். திடீரென மகன் சர்வேஸ் ராஜா, நீரில் மூழ்கி தத்தளித்துள்ளார்.இதைப் பார்த்த ஜோதிலிங்கம் ஆற்றின் நடுப்பகுதியில், தத்தளித்த மகனை காப்பாற்ற போராடியுள்ளார்.


ஆனால், முயற்சி பலனின்றி தந்தை, -மகன் இருவரும் நீரில் மூழ்கி விட்டனர். அருகிலிருந்தவர்கள் கொடுத்த தகவலால் சம்பவ இடத்துக்கு வந்த உடுமலை தீயணைப்பு மற்றும் மீட்பு துறையினர், மூன்று மணி நேரம், ஆற்றின் ஆழமான பகுதியில் தேடி, ஜோதிலிங்கம், சர்வேஸ்ராஜா சடலங்களை மீட்டனர். இருவரின் உடல்களும், உடுமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது. கணியூர் போலீசார் விசாரிக்கின்றனர்.


நாளையவரலாறு செய்திக்காக 


-முஹம்மது ஹனீப் திருப்பூர்.


Comments