யாதும் ஊரே யாவரும் கேளிர் என்று முழங்கியவருக்கு நினைவு தூண்..!

    -MMH


யாதும் ஊரே யாவரும் கேளிர்' என்று முழங்கி தமிழுக்கும் தமிழனுக்கும் உலகில் பெருமை தேடித்தந்த கணியன் பூங்குன்றனாருக்கு சொந்த ஊர் சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூருக்கு அருகில் உள்ள மகிபாலன்பட்டி ஆகும்.


மகிபாலன்பட்டியில் கணியன் பூங்குன்றனாருக்கு
நினைவுத்தூண் அமைக்க 10 சென்ட் நிலத்தை, தானமாக வழங்கிய சுப்பையா செட்டியார் குடும்பத்தாரும், பூங்குன்றன நாட்டாரும்.



சங்கப் புலவர் கணியன் பூங்குன்றனாருக்கு மகிபாலன்பட்டியில் நினைவுத்தூண்  அமைக்கப்பட உள்ளது. இதற்காக தமிழக அரசு ரூபாய் 10 லட்சம் நிதி ஒதுக்கியுள்ளது.  நினைவுத் தூண் அமைக்கப்படுவதற்கு 10 சென்ட் இடத்தை நன்கொடையாக  சுப்பையா செட்டியார் குடும்பத்தாரும், பூங்குன்ற நாட்டாரும் வழங்கியுள்ளார்கள்.  


இதற்கான பத்திரப்பதிவு நேற்று திருப்பத்தூர் துணை சார்பதிவாளர் அலுவலகத்தில் நடந்தது. இதில் தமிழ் வளர்ச்சித் துறை இணை இயக்குனர் நாகராஜன், மகிபாலன்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் பாஸ்கரன், பூங்குன்ற நாட்டார் ராமகிருஷ்ணன் சிவகாமி ஆச்சி, ராசாமணி ஆட்சி, நாகப்பன் செட்டியார் சுப்பையா செட்டியார், விசாலாட்சி ஆச்சி, சிவ சுதா ஆச்சி மற்றும் திருப்பத்தூர் கருநாகராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


-பாரூக் சிவகங்கை.


Comments