பொள்ளாச்சியில் மது போதையில் மருத்துவர் கைது..!!
-MMH
பொள்ளாச்சியில் புது ரோடு பகுதியில் மருத்துவமனை வைத்திருக்கும் மருத்துவர் அருள்ராஜ் வயது 52 இவர் நெகமம் அடுத்து கொண்டேகவுண்டன் பாளையதை சேர்ந்தவார். நேற்று முன் தினம் ஆழியார் அருகில் உள்ள அங்களகுறிச்சி பகுதில் இருந்து தனது ஜீப் உடன் பொள்ளாச்சி நோக்கி வந்துள்ளார்.
இவர் மது போதையுடன் வாகனத்தை இயக்கி வந்துள்ளது தெரியவந்தது.வால்பாறை சாலை தங்கம் தியேட்டர் அருகில் வரும் போது நிலை தடுமாறி வாகனத்தை இயக்கி சாலையில் வரும் வாகனங்கள் மீது மோதி விபத்தை ஏற்படுத்தி உள்ளது குடிப்பிடத்தக்கது.
இதை கவனிக்காமல் போதையில் இயக்கி உள்ளார்,மக்கள் விரைந்து சென்று அவரை பிடித்து பொள்ளாச்சி தாலுகா காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-V. ஹரிகிருஷ்ணன் பொள்ளாச்சி கிழக்கு.
Comments