திருப்பத்தூரில் டெங்கு விழிப்புணர்வு சுகாதாரத்துறை முடிவு..!
-MMH
திருப்பத்தூர் நாகராஜன் நகரில் ஒருவருக்கு டெங்கு : மக்கள் விழிப்புணர்வோடு இருக்க சுகாதாரத்துறையினர் அறிவுரை.
சிவகங்கைமாவட்டம் திருப்பத்தூரில் மக்களிடையே டெங்கு வேகமாக பரவி வருவதால் சுகாதாரத்துறையினர் அடுத்த கட்ட நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.கொரோனா பரவலை தொடர்ந்து, டெங்கும் வேகமாகப் பரவி வரும் நிலையில், சுகாதாரத்துறையினர் வீடுவீடாகச்சென்று பொதுமக்களிடயே
விழிப்புணர்வு ஏற்படுத்தத் திட்டமிட்டுள்ளனர்.
மழைநீரை பாதுகாப்போடு வைக்க வேண்டும் என்றும், சிமெண்ட் தொட்டியில் தண்ணீரைத் தேக்கி வைக்காமல் வெளியேற்ற வேண்டும் என ஆலோசனைகளை வழங்கி வருகின்றனர்.
ஒருவேளை நீர் தேங்கியிருக்கும் சூழ்நிலை ஏற்பட்டால் தண்ணீரில் தேங்காய் எண்ணெய் அல்லது கடலை எண்ணையை ஊற்ற வேண்டும் என சுகாதாரத் துறையினர் கூறுகின்றனர். அதோடு மழை நீரை சமைக்க, குளிக்க பயன்படுத்துவதற்காக தொட்டிகள், டேங்குகள், சின்டெக்ஸ் உள்ளிட்டவைகளில் நீர் தேக்கி வைப்பவர்கள் நீரில் கல் உப்பு பயன்படுத்தினால் டெங்குவிலிருந்துபாதுகாத்துக்கொள்ளலாம் என பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.
-பாரூக் சிவகங்கை.
Comments