பொள்ளாச்சி புதிய பேருந்து நிலையத்தில் குடிநீர் இல்லை!!

     -MMH


     பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலகம் அருகே புதிய பேருந்து நிலையத்தில் அடிப்படைத் தேவைகளில் ஒன்றான குடிநீர் குழாயில் தண்ணீர்  வருவதில்லை. இதனால் பொதுமக்கள் சிரமப்படுகின்றனர் மேலும் நோய் தொற்று பரவலால் கிருமி நாசினி பயன் படுத்தி அடிக்கடி கைகளை கழுவ வேண்டும் என நகராட்சி நிர்வாகம் தெரிவித்திருக்கும் நிலையில் பேருந்து நிலையத்தில் கை கழுவும் இடத்தில் தண்ணீர் வருவதில்லை கிருமினாசினியும் அங்கு வைக்கப்படவில்லை. தீபாவளி பண்டிகையை ஒட்டி பொதுமக்கள் கிராமப்புறங்களில் இருந்து நகரத்திற்கு வர தொடங்கி விட்டனர் இதை கருத்தில் கொண்டு நகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் தெரிவிக்கின்றனர்.


நாளைய வரலாறு செய்திக்காக,


-M.சுரேஷ்குமார்,கோவை தெற்கு.


Comments