அடிக்கடி போன் செய்து தொந்தரவு!! -டிக்டாக் பெண் தற்கொலை!!
-MMH
பூந்தமல்லி: பூந்தமல்லி நம்பி நகர் முதல் தெருவை சேர்ந்தவர் ஜீவிதா(18). கல்லூரி மாணவி. இவர், கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து பூந்தமல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டன. மேலும் மாணவியின் செல்போனை பறிமுதல் செய்து ஆய்வு செய்தபோது தண்டையார்பேட்டையை சேர்ந்த நீலகண்டன்(21) என்ற வாலிபர் ஜீவிதாவிடம் அடிக்கடி செல்போனில் பேசியிருப்பது தெரியவந்தது.
இதையடுத்து, அவரை போலீசார் கைது செய்து விசாரணை செய்தபோது ஜீவிதாவின் டிக்டாக் வீடியோக்களை நீலகண்டன் பார்த்துள்ளார். அப்போது நட்பு ஏற்பட்டு அந்தப் பெண்ணுக்கு அடிக்கடி போன் செய்யும்படி தொந்தரவு செய்து வந்ததாக கூறப்படுகிறது.
இதன் காரணமாக மன உளைச்சலில் இருந்த ஜீவிதா தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. மேலும் தற்கொலைக்கு தூண்டியதாக நீலகண்டன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
-மைதீன்.
Comments