கம்பம் பகுதியில் தொடர் திருட்டு!!
-MMH
கம்பம் பிரதான சாலையில் தொடர்ந்து நான்கு கடைகளின் பூட்டுகள் உடைக்கப்பட்டு திருடப்பட்ட சம்பவம் வியாபாரிகள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
தேனி மாவட்டம், கம்பம் வடக்கு காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட பகுதியில், உள்ள பிரதான சாலையில், கண்ணாடி கடை, பேன்சி ஸ்டோர், பைப் கடை, ரெடிமேட் கடை போன்றவைகள் உள்ளன.
வெள்ளிக்கிழமை காலையில் கடையை திறக்க வந்த உரிமையாளர்கள், கடையின் பூட்டுக்கள், உடைக்கப்பட்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதுபற்றி கம்பம் வடக்கு காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
காவல் நிலைய ஆய்வாளர் சிலைமணி சம்பவம் நடந்த இடங்களை பார்வையிட்டார். மேலும் கைரேகை பிரிவு மோப்பநாய் வரவழைக்கப்பட்டு மேல் விசாரணை செய்து வருகின்றனர்.
நாளைய வரலாறு செய்திக்காக,
-ஆசிக்,தேனி,மாவட்டம்.
Comments