மழை வேண்டி கழுதை திருமணம்!-கிராம மக்கள் வினோத வழிபாடு..!

     -MMH


பல்லடம் அருகே மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் நடத்தி வைத்து, கிராம மக்கள் வழிபாடு மேற்கொண்டனர்.திருப்பூர் மாவட்டம், பல்லடத்தை அடுத்த சாமிகவுண்டம்பாளையம் கிராமத்தில், மழை வேண்டி நேற்று வினோத வழிபாடு நடந்தது. அதில், ஆண், பெண் கழுதைகளுக்கு திருமணம் நடத்தி வைக்கப்பட்டது.


முன்னதாக, கழுதைகள் ஊர்வலமாக விநாயகர் கோவிலுக்கு அழைத்து வரப்பட்டன. 101 தீபங்கள் ஏற்றப்பட்டு, திருவிளக்கு வழிபாடுநடந்தது.காப்பு கட்டுதல், பெண் வீட்டார் அழைப்பு, நிச்சயதார்த்தம் உள்ளிட்ட சடங்குகளை தொடர்ந்து, கழுதைகளுக்கு திருமணம் நடந்தது. மழை பெய்ய வேண்டி, பொதுமக்கள் பிரார்த்தனை செய்தனர்.கிராமத்தினர் கூறுகையில், 'மழையின்றி தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டு வருவதால் ஊர்மக்கள் இணைந்து கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்தோம். கண்டிப்பாக மழை பெய்யும் என நம்புகிறோம்' என்றனர்.


நாளையவரலாறு செய்திக்காக 


-முஹம்மது ஹனீப் திருப்பூர்.


Comments