G.S.T. அதிகாரிகள் திடீர் ஆய்வு!! - பொள்ளாச்சி அருகே பரபரப்பு!!
-MMH
ரத்து செய்யப்பட்ட நிறுவனம் மீண்டும் இயங்கியதால் புகார்!!
பொள்ளாச்சி:பாலக்காடு ரோடு அய்யம்பாளையத்தில் தனியாருக்குச் சொந்தமான அட்டை தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்று உள்ளது.இந்த தொழிற்சாலைக்கு பதிவு ரத்து செய்யப்பட்டு இருந்த நிலையில் மீண்டும் இயங்கி வருவதாக கோவை மத்திய கலால் முதன்மை ஆணையாளர் அலுவலகத்திற்கு புகார் வந்தது.
புகாரின் பேரில் ஜிஎஸ்டி அதிகாரிகள் அந்த நிறுவனத்திற்கு சென்று அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். இதில் நிறுவனத்தின் பதிவு கடந்த ஏப்ரல் மாதம் ரத்து செய்யப்பட்டதாக தெரிய வந்தது. மேலும் நிறுவனத்தின் வளாகத்தில் வெற்றி விகாஸ் பெயரில் இன்னொரு காகித அட்டை தயாரிக்கும் நிறுவனம் செயல்பட்டு வந்ததாக தெரிகிறது. பதிவு ரத்து செய்யப்பட்டு இருந்த முதல் நிறுவனம் ஒரு கோடியே 70 லட்சம் ரூபாய் வரி ஏய்ப்பு செய்துள்ளது மேலும் இரண்டாவது நிறுவனமும் ஒரு கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்துள்ளது. மொத்தம் 2 கோடியே 70 லட்சம் ரூபாய் வரி ஏய்ப்பு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முக்கிய ஆவணங்களை கைப்பற்றி அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நாளைய வரலாறு செய்திக்காக,
-M.சுரேஷ் குமார்,கோவை தெற்கு.
Comments