6 மாவட்டங்களில் கொரோனா தொற்று பரவல் அதிகரிப்பு!!
-MMH
சென்னை:தமிழகத்தில் நேற்று 73 ஆயிரத்து 862 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 1,595 ஆண்கள், 1,057 பெண்கள் என மொத்தம் 2 ஆயிரத்து 652 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் 12 வயதுக்கு உட்பட்ட 95 குழந்தைகளும், 60 வயதுக்கு மேற்பட்ட 370 முதியவர்களும் இடம் பெற்றுள்ளனர். அனைத்து மாவட்டங்களிலும் நேற்று புதிய தொற்று பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.
இதில் அதிகபட்சமாக சென்னையில் 756 பேரும், கோவையில் 251 பேரும், சேலத்தில் 170 பேரும், குறைந்தபட்சமாக திண்டுக்கலில் 5 பேரும், பெரம்பலூரில் இருவரும் பாதிக்கப்பட்டு உள்ளனர். மேலும் சென்னை, செங்கல்பட்டு, சேலம், கோவை, ஈரோடு, திருவள்ளூர் ஆகிய 6 மாவட்டங்களில் தொற்று பரவல் அதிகரித்து இருக்கிறது. இந்த மாவட்டங்கள் அனைத்திலும் 100-க்கும் மேற்பட்டோர் தொற்று பாதிப்புக்கு ஆளாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.
-ஸ்டார் வெங்கட்.
Comments