கோவையில் தொடரும் ஆன்லைன் விளையாட்டு தற்கொலைகள்!!
-MMH
கோவை மாவட்டம் சீரநாயக்கன்பாளையம் சேர்ந்த 28 வயதே ஆன மதன் குமார் என்பவர் ஆன்லைனில் ரம்மி விளையாடும் இவர் விளையாட்டில் தோல்வியைத் தழுவியதால் கடன்பெற்று விளையாட்டை கடன் பெற்று விளையாடியதாக தெரிகிறது
இந்நிலையில் மன உளைச்சலுக்கு ஆளான மதன்குமார் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்
இது கோவை மாவட்டத்தில் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது இதுபோல் கடந்த 10 நாட்களில் சென்னையிலும் மதுரையிலும் இதுபோன்ற தற்கொலைகள் நடைபெற்றதாக தெரிகிறது
மேலும் இதுபோன்ற தற்கொலைகள் நடைபெறாமல் இருக்க முற்றிலும் ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய வேண்டும் என்றும் பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கேட்டுக் கொள்கிறார்கள்.
மேலும் மதன்குமாரின் தற்கொலையை கோவைஆர்எஸ் புரம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
-ஈஷா,கோவை.
Comments