இயற்கையின் படைப்பில் இலைகளும் மருந்தாகும் அற்புதம்!! பாகம்-2
-MMH
தாவரங்களைப் பொருத்தவரை இலை,தழை,காய்,கனி,தண்டு,பட்டை,வேர் என அத்துனை உறுப்புகளும் மக்களுக்குப் பயன்படும் விதத்தில் படைக்கப் பட்டிருப்பது விந்தையிலும் விந்தை! காய்ந்து உதிர்ந்து சருகாகும் இலையைப் பக்குவமாகப் பயன்படுத்தினால் ஏற்படும் நன்மைகளைப் பார்த்து வருகிறோம். இன்று அரச இலையின் மருத்துவகுணங்களைக் காண்போம்.
அரச இலைச்சாறு ஏழைகளின் டானிக்காக கருதப்படுகிறது. நல்ல மலமிளக்கியாகவும், உடலை குளிர்ச்சியாக வைத்திடவும் உதவுகிறது. காய்ச்சலுக்கு நல்ல மருந்து. கர்ப்பப்பைக் கோளாறுகள் மறையும். அரசமரத்தின் பழங்கள் மலட்டுத் தன்மையை நீக்கவல்லது. அதனாலேயே ஆலயங்களில் குறிப்பாக விநாயகர் கோவில்களில் அரசமரம் இருப்பதைக் காணலாம். மகளிர் அரசமரத்தைச் சுற்றி வரும்போது அவர்கள் கர்ப்பக் கோளாறுகள் நீங்கி விடுவதாகவொரு நம்பிக்கை.
பூவரசு இலையை அரைத்து தீக்காயங்கள், புண்கள், தோல் வியாதிகள், தொழுநோய் முதலியவற்றுக்குப் பூசிவர விரைந்து குணம் பெறலாம். இவ்விலைச்சாறு சீதபேதிக்கு கைகண்ட மருந்தாகும்.
குறிப்பு: இந்த அறிவுரை உங்களுக்கு பொதுவான தகவல்களை வழங்க மட்டுமே கொடுக்கப்படுகிறது. எதையும் எடுத்துக்கொள்வதற்கு முன் உங்கள் மருத்துவரைக் கலந்து ஆலோசிக்க வேண்டும்.
-Ln. இந்திராதேவி முருகேசன், சோலை.
Comments