அத்திக்கடவு அவிநாசி திட்டப் பணிகளை சபாநாயகர் ஆய்வு..!
-MMH
அத்திக்கடவு - அவிநாசி திட்டம்...பணிகளை சபாநாயகர் ஆய்வு!!
அவிநாசி:அத்திக்கடவு - அவிநாசி நீர் செறிவூட்டும் திட்டப்பணியை, சபாநாயகர் தனபால் பார்வையிட்டார்.அவிநாசி சட்டசபை தொகுதி எம்.எல்.ஏ., சபாநாயகர் தனபால், நேற்று அவிநாசி, சேவூர் அருகே பாப்பாங்குளம் பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும், அத்திக்கடவு திட்டப்பணியை பார்வையிட்டார். பணி நிலவரம் குறித்து, அதிகாரிகள் விளக்கினர்.அதன்பின், அவிநாசியில் எம்.எல்.ஏ., அலுவலகத்தில், பொதுமக்களிடம் மனுக்களை பெற்றார்.மனு அளிக்க வந்த பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சியினருக்கு, பேரூராட்சி நிர்வாகத்தின் சார்பில் உடல் வெப்ப பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, சானிடைசர் மூலம், கைகழுவ ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் ஜெகதீசன், சேவூர் ஊராட்சி தலைவர் வேலுசாமி, ஏ.சி.எம்.எஸ்., தலைவர் சுப்ரமணியம் உட்பட பலர் பங்கேற்றனர்.
நாளையவரலாறு செய்திக்காக
-முஹம்மதுஹனீப் திருப்பூர்.
Comments