இன்ஜி., தரவரிசை பட்டியலில் முதலிடம் பிடித்த மாணவி!!

       -MMH


கோவை : இன்ஜி. படிப்புகளுக்கான கவுன்சிலிங் தரவரிசை பட்டியல் வெளியிட்ட நிலையில் கோவையை சேர்ந்த மாணவி சஸ்மிதா முதலிடம் பிடித்துள்ளார்.


அண்ணா பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட 461 கல்லுாரிகளில் உள்ள ஒரு லட்சத்து 63 ஆயிரத்து 154 இடங்களுக்கு கவுன்சிலிங் நடத்த தரவரிசை பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. இதில் கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியை சேர்ந்த மாணவி சஸ்மிதா 200க்கு 199.67 மதிப்பெண்களுடன் முதலிடம் பிடித்துள்ளார்.


இவர் கூறுகையில்"பத்தாம் வகுப்பு வரை கோவையில் உள்ள தனியார் பள்ளியில் படித்தேன். தேசிய மாநில இன்ஜி. பல்கலைகளில் சேர வேண்டுமென்பதற்காகவே ஐதராபாத்தில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 படித்தேன். தரவரிசை பட்டியலில் முதலிடம் கிடைக்கும் என எதிர்பார்க்கவில்லை. கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடப்பிரிவு தேர்வு செய்ய திட்டமிட்டுள்ளேன். சிவில் சர்வீஸ் தேர்வெழுதி ஐ.ஏ.எஸ். ஆக வேண்டுமென்பதே லட்சியம்" என்றார்.


-Ln. இந்திராதேவி முருகேசன், சோலை.


Comments