ஆற்றில் மூழ்கி இளைஞர் பலி!! - நண்பர்கள் பதற்றம்!!

        -MMH


         கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த ஆனைமலை மாகாளியம்மன் வீதியைச் சேர்ந்த நடராஜனின் மகன் மணிகண்டன் கூலித் தொழிலாளியான இவர் நேற்று முன்தினம் மாலை வேளையில் நண்பர்களுடன் ஆற்றுப் பாலம் அருகே குளித்துக் கொண்டிருந்தார். அப்பொழுது எதிர்பாராதவிதமாக ஆற்றில் மூழ்கினார் வெகுநேரமாகியும் மணிகண்டன் மேலே வராத காரணத்தினால் நண்பர்கள் பயத்தில் ஆழ்ந்தனர்.பின்பு பொள்ளாச்சி தீயணைப்பு துறை அலுவலகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு தீயணைப்பு துறை அதிகாரிகள் விரைந்து வந்து மணிகண்டனை தேடும் பணியில் ஈடுபட்டனர்.


 


           நேற்று உடலை கைப்பற்றிய தீயணைப்புத்துறை அதிகாரிகள் பிரேதப் பரிசோதனைக்காக வேட்டைக்காரன்புதூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.மேலும் இதுகுறித்து ஆனமலை காவல்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


நாளைய வரலாறு செய்திக்காக,


-M.சுரேஷ்குமார்,கோவை தெற்கு.


Comments