மனிதனை வாட்டி வதைக்கும் நெஞ்செரிச்சலுக்கு எளிய தீர்வு!!!

       -MMH 


லவங்கத்தின் மருத்துவ பயன்கள் குறித்து இந்த செய்தித் தொகுப்பில் காணலாம்.


லவங்கத்தில் மாங்கனீஸ், இரும்பு, கால்சியம் மற்றும் தாது உப்புக்கள் நிரம்பியுள்ளன. இவை ரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலையும், சர்க்கரை நோயை கட்டுக்குள் வைக்க உதவுகிறது. தினமும் காலை, மாலை அரை தேக்கரண்டி லவங்க பொடியுடன், ஒரு தேக்கரண்டி தேன் கலந்து சாப்பிட்டால் நாள்பட்ட மூட்டுவலி குணமாகும். வாரம் இருமுறை லவங்கம் சாப்பிட்டால் அஜீரணக் கோளாறு, நெஞ்சு எரிச்சல் ஏற்படாது.


இன்றைய காலகட்டத்தில், மன உளைச்சலால், பலர் தூக்கத்தை தொலைத்து விட்டு திரிகிறார்கள். இதற்கு மத்தியில், ஒரு சிலருக்கு இரவு நேரங்களில் அடிக்கடி நெஞ்செரிச்சல் ஏற்படும்.


இதன் காரணமாக, அவர்கள் தூக்கத்தை தொலைத்து விட்டு அவதிப்படும் சூழ்நிலை ஏற்படுகிறது. எனவே மேற்கண்ட முறைப்படி வாரம் இரண்டு முறை லவங்கம் எடுத்துக் கொண்டால் இந்த பிரச்சனையே கிடையாது.


-ஈஷா,கிரி.


Comments