கோத்தகிரி சாலையில் யானைகள் வழிமறித்த தால் பரபரப்பு!!-வாகன ஓட்டிகள் அச்சத்துடன்..!

       -MMH


         மேட்டுப்பாளையம்,கோத்தகிரி சாலையில் வாகனங்களை யானைகள் வழிமறித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. மேற்கு தொடர்ச்சி மலை அடிவார பகுதியில் அதிகளவில் வனவிலங்குகள் உயிர் வாழ்கின்றன. அங்கு வாழும் யானை காட்டுமாடு, புலி, கரடி, சிறுத்தை, மான் போன்ற வன உயிரினங்கள் அடிக்கடி சாலையை கடந்து செல்கின்றன.


      மேட்டுப்பாளையம் கோத்தகிரி சாலையில் தினந்தோறும் நூற்றுக்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வரும் நிலையில் நேற்று காலை 10 மணி அளவில் 3 காட்டு யானைகள் அந்த சாலையில் வாகனங்களை வழிமறித்து நின்றன.


   கோத்தகிரி 1வது கொண்டை ஊசி வளைவில் ஒய்யாரமாக சாலையில் நின்ற அவை அங்குள்ள மரக் கிளைகளை உடைத்து சாப்பிட்டு கொண்டு இருந்தன. இதனால் அச்சமடைந்த வாகன ஓட்டிகள் வாகனங்களை மேலும் இயக்கி செல்ல அச்சப்பட்டனர்.


      இதனால் வாகனங்கள் அப்படியே நிறுத்தப்பட்டன. சுமார் 1 மணி நேரம் நீண்ட வரிசையில் வாகனங்கள் நின்றிருந்தன. ஒரு வழியாக யானைகள் அடர் வனத்திற்குள் சென்றனர். அதன்பிறகு வாகனங்களை வாகன ஓட்டிகள் இயக்கி சென்றனர். இதனால் பாதிக்கப்பட்ட போக்குவரத்து பிறகு சீரானது.


-பீர்,குறிச்சி.


 


Comments