போத்தனூர் போலீசாருக்கு டாட்டா காட்டிய பலே திருடன்!! - தேடுதல் வேட்டையில் போலீஸ்..!

        -MMH


       கோவையில் கொள்ளை சம்பவம் ஒன்றிற்காக ஒருவருடமாக தேடபட்டு வந்த குற்றவாளி இன்று போலிஸ் கண்ணில் மண்ணை தூவி மீண்டும் மாயமானான் கோவை உக்கடம் ஜி எம் நகரை சேர்ந்தவன் ஜமேஷா(24). இவர் ஒரு வருடத்திற்க்கு முன்னர் கஞ்சிக்கோணம்பாளையத்தில் உள்ள கோவிலில் திருட்டு வழக்கில் கைது செய்யபட்டவன் ஆவான். கடந்த ஒரு வருடமாக போலிஸார் கண்ணில் மண்ணை தூவி மறைந்திருந்த இவன் போத்தனூர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டான்.


     நேற்று மாலை இவனை மருத்து பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு போத்தனூர் போலிஸார் அழைத்து வந்து இருக்கின்றனர். பின்னர் மருத்துவமனையின் உள் பரிசோதனை செய்யும் போது கைதி ஜமேஷா தப்பி ஓட்டம் பிடித்தான். ஒரு வருடமாக கொள்ளை சம்பவம் தொடர்பாக தேடப்பட்ட குற்றவாளியான இவன் கைது செய்ப்பட்ட அன்றே மீண்டும் காவல் துறையினரின் கண்ணில் மண்ணை தூவி மாயமானதை தொடர்ந்து காவல்துறையினர் தேடி வருகின்றனர்.


-சீனிவாசன்,போத்தனூர்.


Comments