கோவை அருகே அதிர்ச்சி!!- சிறுவனுக்கு பாலியல் தொல்லை..!

   -MMH


சிறுவனுக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்தவர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது.


       புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்தவர் டேனியல் (54).சமையல் வேலை செய்யும் இவருக்கு திருமணமாகி ஒரு ஆண் மற்றும் இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். அத்திபாளையம் பகுதியில் வீடு எடுத்து தங்கி உள்ள இவர் கடந்த ஒரு மாதமாக அத்திபாளையம் பகுதியில் உள்ள மெஸ் ஒன்றில் வேலை செய்து வருகிறார்.


   கடந்த 28ம் தேதி எட்டு வயது சிறுவனை வீட்டுக்கு அழைத்து வந்தவர் அந்த சிறுவனுக்கு தங்கியிருந்த வீட்டின் மாடிக்கு அழைத்து சென்று பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்து உள்ளார்.இது குறித்து சிறுவன் தன் தாயிடம் கூறியதை தொடர்ந்து கோவில்பாளையம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.


   போலீசாரின் விசாரனையில் ஒரு வார காலமாக சிறுவனுக்கு பாலியல் ரீதியான தொல்லை கொடுத்து வந்தது போலீசார் விசாரனையில் தெரியவந்தது. இதனையடுத்து டேனியல் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சிறுவனை பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்த சம்பவம் அப்பகுதி மக்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.


-சீனிவாசன்,போத்தனூர்.


Comments